மன்ற விழா
    

              பரணி அந்தப் பள்ளியின் மாணவர் மன்றத் தலைவன். அதில் அவனுக்குக் கொஞ்சம் ஆணவமும் இருந்தது. எந்தச் செயலும் தன்னால்தான் நடந்தது என்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தி விடுவான். இதனால் பிற மாணவர்கள் பரணியின் மீது சிறிது வெறுப்பு கொண்டிருந்தனர்.

    ஒவ்வொரு ஆண்டிருதியிலும் மாணவர்கள் மன்றத்தின் கலை நிகழ்ச்சிகள் சிறப்பாக நடைப்பெறுவது வழக்கம்.

        விழாவுக்கு இன்னும் பத்து நாட்கள்தான் இருந்தன. எனவே மாணவர்கள் அனைவரும் பரணியின் தலைமையில் மரத்தடியில் ஒன்று கூடினர்.

       பரணி புதிதாக ஒரு மாணவனை அழைத்து வந்திருந்தான். " நண்பர்களே! இவர் பெயர் தீபன். நம் பள்ளிக்குப் புதிதாக வந்திருக்கிறான்.  நன்றாகப் படிப்பான், படம் வரைவான், நிரம்ப திறமையானவன், விழா மேடை மற்றும் நிகழ்ச்சித் தொகுப்பைத் தீபன்தான் செய்யப் போகிறான்" என்றான் பரணி.

     மற்ற மாணவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். முருகன் மட்டும் " தீபன் நன்றாகப் படிக்கலாம், படம் வரையலாம். ஆனால், இப்பள்ளிக்கும் இத்தகைய நிகழ்ச்சிக்கும் புதிது தானே! நிகழ்ச்சி செய்வது சிரமம் இல்லையா?" என்றான்.

   " ஒரு சிரமமும் இல்லை. நீங்கள் கவலைப்பட வேண்டாம்" என்று கூறி விட்டு சட்டென்று சென்று விட்டான் பரணி.

       விழாவன்று நிகழ்ச்சி தொடங்கப் போகும் போதுதான் தீபனுக்கு ஒலிவாங்கி (மைக்) நினைவு வந்தது. முருகனும் மாதவனும் ஒலிவாங்கி கடைக்கு ஓடினர். ஆனால் ஒலிவாங்கி வேறு நிகழ்ச்சிக்குக் கொடுக்கப்பட்டிருந்ததால் ஏமாற்றத்துடன் திரும்ப வேண்டியதாயிற்று.

    ஒலிவாங்கி இல்லாமல் விழா தொடங்கியது. கூட்டம் அதிகம். எவ்வளவு கத்திப் பேசியும் பின்னால் இருப்பவர்களுக்குக் காதில் விழவில்லை.

   தீபனுக்கு மேடை அனுபவம் புதிது என்பதால் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குவதில் குழப்பம் ஏற்பட்டது. ஆண்டுதோறும் சிறப்பாக நடக்கும் விழா இந்த ஆண்டு பிசுபிசுத்துப் போனது.

 ::  கோகுலம்
Free Web Hosting