|
தமிழே உலக முதல் தாய்மொழி என்பதனை வலியுறுத்திட ஒன்பது சான்றுகள்....... |
|
| 1 |
தமிழ் குமரி நாட்டில் தோன்றியமை. |
| 2 |
பழந்தமிழ் திராவிட மொழிகளுக்குத் தாயாக இருத்தல். |
| 3 |
ஆரிய மொழிகளாகக் கருத்தப்படும் வடநாட்டு மொழிகளின் அடிப்படை தமிழாக இருத்தல். |
| 4 |
மேலையாரிய மொழிகளிலும் அடிப்படைச் சொற்கள் பல தமிழாக இருத்தல். |
| 5 |
இருமுது குரவரைக் குறிக்கும் அம்மை அப்பன் என்னும் தமிழ்ச்சொற்கள் திரிந்தும் திரியாமலும் பெரும்பாலான உலகப் பெருமொழிகளில் வழங்குதல். |
| 6 |
எல்லா மொழிக் குடும்பங்களிலும் ஒன்று இரண்டேனும் தமிழ்ச்சொல் இருத்தல். |
| 7 |
ஆரிய மொழிகளில் உள்ள சுட்டுச் சொற்களெல்லாம் தமிழ்ச் சுட்டுச் சொற்களிலிருந்து தோன்றியிருத்தல். |
| 8 |
தமிழ் இலக்கண அமைதிகள் பல மொழிகளிலும் காணப்பெறுதல். |
| 9 |
பல மொழிகளுக்கு அல்லது மொழிக் குடும்பங்களுக்குச் சிறப்பாகச் சொல்லப்பெறும் இலக்கண அமைதிகள் மூல நிலை தமிழில் இருத்தல். |
|
- மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர். |
|