சொற் சிறப்பு

தமிழ் மொழிக்குள்ள சிறப்புகளில் " சொற்சிறப்பு" என்பதும் ஒன்று. இச் சிறப்பு ஒரு தனித்தன்மை வாய்த்தது, இதனைப் பறமொழிகளில் காணை இயலாது. பிற மொழிச் சொற்கள் உருவத்தை மட்டுமே காடுவன. தமிழ்ச் சொற்கள உருவத்தையும், பருவத்தையும் சேர்த்துக் காட்டக் கூடியன.

" பெண்" ஆங்கிலேயர் " woman" எனபர். வடமொழியினர் "ஸ்திரீ" என்பர். இவை இரண்டும் உருவத்தை மட்டுமே காட்டுகின்றன: பருவத்தைக் காட்டவில்லை. காட்ட வேண்டுமானால், "young", " old " என்பதையோ சேர்த்துக் கூறியாக வேண்டும். இவை அம் மொழிகளின் சொற்சிறப்பைக் காடுவதாக இல்லை. தமிழிலுள்ள சொற்கள் உருவத்தோடு அதன் பருவத்தையும் காட்டுவதைக் கண்டு மகிழுங்கள்.

பேதை பெண் 5 அகவைக்கும் கீழ்
பெதும்மை பெண் 10 அகவைக்கும் கீழ்
மங்கை பெண் 16 அகவைக்கும் கீழ்
மடந்தை பெண் 25 அகவைக்கும் கீழ்
அரிவை பெண் 30 அகவைக்கும் கீழ்
தெரிவை பெண் 35 அகவைக்கும் கீழ்
பேரிளம் பெண் பெண் 45 அகவைக்கும் கீழ்

 

பாலன் ஆண் 7 அகவைக்கும் கீழ்
மீளி ஆண் 10 அகவைக்கும் கீழ்
மறவோன் ஆண் 14 அகவைக்கும் கீழ்
திறலோன் ஆண் 15 அகவைக்கும் கீழ்
காளை ஆண் 16 அகவைக்கும் கீழ்
விடலை ஆண் 30 அகவைக்கும் கீழ்
முதுமகன் ஆண் 30 அகவைக்கும் கீழ்

இவ்வாறு பன்னிருபாட்டியல் ஆணகளுக்கும் ஏழு பருவப் பெயர்களைத் தருகிறது. மேலும், ஆண்களின் பருவத்தைப் பின்வருமாறும் கொண்டு கூறலாம்.

பிள்ளை ஆண் - குழந்தைப்பருவம்
சிறுவன் ஆண் -  பாலப் பருவம்
பையன் ஆண் - பள்ளிப் பருவம்
காளை ஆண் - காதற் பருவம்
தலைவன் ஆண் - குடும்பப் பருவம்
முதியோன் ஆண் - தளர்ச்சிப் பருவம்
கிழவன் ஆண் - மூப்புப் பருவம்.
Free Web Hosting