மாந்தெனக் குமரிமலை மருவியன் தமிழனே!

மாண்புடைய நாகரிகம் மலர்ந்தவனும் தமிழனே!

மொழி வளர்ச்சி முதன்முதலாய் முற்றியவன் தமிழனே!

மோனையுடன் சிறந்த செய்யுள் பேசியவன் தமிழனே!

பனிமலை முதன்முதற்கைப் பற்றியவன் தமிழனே!

பலமுறைமீன் புலிவில் அதிற் பதித்தவனும் தமிழனே!

                                                                                           - பாவாணர்      

     

கனியிடை ஏறிய சுளையும் - முற்றல்

கழையிடை ஏறிய சாறும்,

பனிமலர் ஏறிய தேனும், - காய்ச்சும்

பாகிடை ஏறிய சுவையும்

நனிபசு பொழியும் பாலும் - தென்னை

நல்கிய குளிரிள நீரும்,

இனியன என்பேன் எனினும், - தமிழை

என்னுயிர் என்பேன் கண்டீர்.

                                                                                          - பாவேந்தர்      

     
         
Free Web Hosting