அலெக்ஸாண்டர்

 

   பேரரசர் அலெக்ஸாண்டர் தம் படை வீரர்களுடன் போருக்குச் சென்றார். ஒரு பாலைவனத்தில் போர் வீரர்களுடன் தங்கினார். அனைவருக்கும் தண்ணீர் தாகம்

      அப்போது ஒரு வழிப்போக்கர் தோல்பையில் தண்ணீர் எடுத்துக் கொண்டு ஒட்டகத்தில் வந்தார். அரசர் “ இந்தத் தண்ணீரை யாருக்கு கொண்டு போகிறீர்கள் ? “ என்றார்.

    அவர் “ எனது மனைவி மக்களுக்காகக் கொண்டு போகிறேன். நீங்களும் தாகம் தீருங்கள் “ என்று கூறி, தண்ணீரை எடுத்துக் கொடுத்தார்.

      அவர் அந்தத் தண்ணீரை உற்றுப் பார்த்தார். அத்தண்ணீரில் போர் வீரர்களின் முகங்கள் தெரிந்தன. உடனே, தண்ணீரை அவரிடமே கொடுத்து “ நீங்கள் கொண்டு போங்கள். இத்தண்ணீரை நான் மட்டும் குடித்தால் ஆயிரக்கணக்கான என் போர் வீரர்கள் தளர்ச்சியுற்று கீழே விழுந்து விடுவார்கள் “ என்று பேரரசர் கூறினார். இது அவரது போர் வீரர்களுக்குப் புதிய உந்துதலையும், புதிய சத்தியையும் கொடுத்ததில் வியப்பு இல்லை. ஒரு தியாகம் ஒரு வெற்றிக்கு அடிதளம்.

  

 

Free Web Hosting