பாரதி

   ஒரு முறை பாரதியார் திருவனந்தபுரம் சென்றிருந்த பொழுது, அங்கிருந்த விலங்கு காட்சியகத்திற்குச் சென்றார். அங்குள்ள எல்லா விலங்குகளையும் கைகளால் தொட்டுப் பார்க்கத் தொடங்கினார். பக்கத்தில் இருந்தவர்கள் சொல்லியும் கேட்கவில்லை. சிங்கத்தையும் புலியையுமாவது தஒட வேண்டாம் என்று காவற்காரர் கேட்டுக்கொண்டார். பாரதியார் அதையும் கேட்காமல் " நீய விலங்கிற்கு அரசன். நான் கவி அரசன். உன்னைக் காண வந்திருக்கிறேன். நீ உன் கர்ஜனை மூலம் உன் அன்பை எனக்குத் தெரியச் செய்" என்று சொல்லி, சிங்கத்தைத் தடவிக் கொடுத்தார். சிங்கமூம் மகிழ்ந்து கர்ஜனை செய்து தன் அன்பை வெளிப்படுத்தியது. அருகில் இருந்தவர்கள் வியந்து நின்றனர்.

 

 

      மகாகவி பாரதியார் ஒருமுறை சொற்பொழிவாற்றி முடித்ததும் அவரை வழியனுப்ப சில தொண்டர்கள் தொடர்வண்டி நிலையத்திற்கு வந்தார்கள். தொடர்வண்டி வந்தது. அவசரமாக வண்டியிலேறச் சென்ற பாரதியார், தவறி மண்ணில் விழுந்தார், "கவிஞரே! பார்த்து வரக் கூடாதா?" என்று சொன்னார் தொண்டர் ஒருவர். " நாண் மண்ணில் விழுந்ததற்காகப் பதறாதீர்கள். என் தாய் நாட்டு மண்ணில் தானே விழுந்தேன்" என்று சிரித்துக் கொண்டே சொன்னார் பாரதியார்.

 

 

Free Web Hosting