காந்தி

   காந்தி சென்னைக்கு வரும் போதெல்லாம் ஜி.ஏ. நடேசன் என்ற நாட்டு பத்தரது இல்லத்தில்தான் தங்குவார். ஒருமுறை அவ்வாறு தங்கியிருக்கும் போது அவரது பெண் குழந்தை காந்திக்கு அன்புப் பரிசாக ஒரு வரிசலைக்(பென்சிலை) கொடுத்தாள். அதை காந்தி மிகவும் கவனமாக காத்து வந்தார்.

     ஒரு நாள் சபர்மதி ஆசிரமத்தில் காந்தி எதையோ மும்முரமாகத் தேடிக் கொண்டிருந்தார்.  நிரம்ப நேரம் தேடி அந்தப்பொருளைக் கண்டுபிடித்தார். எல்லாரும் ஏதோ முக்கியமான பொருளைத்தான் தேடிக் கொண்டிருந்தார் என்று நினைத்து அவர் அருகே சென்று பார்த்தால், அது அந்தக் குட்டிப் பெண் கொடுத்த வரிசில். " போயும் போயும் இதையா இவ்வளவு சிரமப்பட்டுத் தேடினீர்கள்?" என்று ஆசிரமத்திலிருந்த அனைவரும் கேட்டார்கள், உடனே காந்தி " பொருளின் அளவைப் பார்க்காதீர்கள். அதைக் கொடுத்தவரது உள்ளத்திலுள்ள அன்பை மட்டும் பாருங்கள்" என்றார்.

 

Free Web Hosting