ஹோ சி மின்

   கப்பல்கள் வரிசையாக நின்ற சைகோன் துறைமுகத்திற்குள் ஓர் இளைஞன் நுழைந்தான். தனக்குக் கப்பலில் ஒரு வேலை கொடுக்கும்படி கேட்டான். எலும்பும் தோலுமாய் இருந்த அவனுடைய உருவத்தைப் பார்த்த மாலுமி, "உனக்குக் கப்பலில் வேலையா?" என்று கலகலவென சிரித்தார். சற்றி சிந்தித்து "எந்த வேலையும் செய்வாயா?" என்றார், "எந்த வேலையும் பழகினால் செய்ய முடியும்" என்றான் அந்த இளைஞன். அந்தப் பதிலில் ஓர் உறுதி தொனித்தது. அவனுக்குச் சமையல் வேலை கொடுக்கப்பட்டது. தூங்குவதற்கான நேரம் கிடைத்தாலும் தூங்காமல் புத்தகங்களைப் படிப்பான்.

    பிறகு தன்னுடைய அயராத உழைப்பால் வியட்நாம் நாட்டின் தலைவர் ஆனான் அந்த இளைஞன். அவர்தான் டாக்டர் ஹோ சி மின். இன்றும் அவர் வியட்நாமின் நாட்டுப்பிதா என்று மக்களால் அழைக்கப்படுகிறார்.

Free Web Hosting