கலீலியோ

   தொலைநோக்கியைக் கண்டுபிடித்த கலீலியோ தன் கடைசிக் காலத்தில் ஓய்வு இல்லாமல் உழைத்தார், வான மண்டலத்தின் இரசியங்களையெல்லாம் கண்டறிந்து உலகிற்குச் சொன்ன கலிலீயோ, 1637- ஆம் ஆண்டு கண்பார்வை இழந்து குருடர் ஆனார். தமது நிலையை விளக்கித் தன் நண்பர் ஒருவருக்குக் கடிதம் எழுதினார்.

     " நான் சீர்செய்ய முடியாதபடி முழுக் குருடனாக ஆகி விட்டேன். வானத்தையும், பூமியையும், அண்டத்தையும் அதிலுள்ள அழகையும் மக்களுக்கு விரிவுப் படுத்திக் காட்டிய நான் இப்போது பார்வை இழந்துவிட்டப்படியால் அவை யாவும் சுருங்கி சிறுத்து நான் இருக்கும் இடத்திற்குள்ளேயே அடங்கிப் போய் விட்டன. இயற்கையின் சித்தம் அதுவானல் அதுவே எனக்கு மகிழ்ச்சி தரக்கூடியதாகும்" என்றார்.

 

 

Free Web Hosting