கவிஞர் ஆவுடையார்

   கவிஞர் ஆயுடையார் கோவிலுக்குக் கட்டை வண்டியில் போய்க் கொண்டிருந்தார். பக்கத்தில் இருந்த ஒரு நண்பர், கவிஞருடைய பாடல்களை வெகு உரத்த குரலில் பாட ஆரம்பித்தார்.  உடனே கவிஞர், " தயவு செய்து பாரதியார் பாடல்களில் ஏதாவது பாடுங்களேன்!" என்று சொன்னார்.

      " தங்கள் பாட்டுக்களை விடப் பாரதியார் பாடல்கள் மீது தங்களுக்கு ஏன் இத்தனை மோகம்?" என்று கேட்டார் நண்பர்.

      அதற்குக் கவிஞர், " மோகம் என்பதற்காகச் சொல்லவில்லை. பாரதியார் இறந்து விட்டார். அவர் பாடல்களை எப்படி கொலை பண்ணினாலும் அவர் வருந்தப் போவதில்லை. அதற்காகத்தான் சொன்னேன்!" என்றார்.

 

Free Web Hosting