நொபு நோகா

   சப்பான் நாட்டுப் படைத் தளபதி 'நொபு நோகா' பல போர்களைக் கண்டவர். திறமையான புத்திசாலி. ஒரு தடவை எதிரி நாட்டின் மேல் படையெடுத்துப்போன போது, எதிரியின் பலத்தையும், ஆயுதக் குவியலையும் கண்ட படை வீரர்கள், 'எதிரிகளை வெல்ல முடியுமா?' என்று ஐயம் கொண்டனர்.

   உடனே நொபு நோகா, " அருகிலுள்ள புத்தர் கோவிலுக்குப் போய் பூவா, தலையா போட்டுப் பார்ப்போம். தலை விழுந்தால் நாம்தான் வெற்றி பெறுவோ. பூ விழுந்தால் போரே வேண்டாம், திரும்பிப் போய் விடலாம்." என்றார். படை வீரர்களும் உடன்பட்டனர்.

     கோவிலுக்குப் போய் நொபுநோகா காசைச் சுண்ட, தலை விழுந்தது. படை வீரர்கள் மகிழ்ச்சியுடன் ' வெற்றி பெறுவோம்' என்ற நம்பிக்கையுடன் போரிட்டு, வெற்றிக் களிப்போடு நாடு திரும்பினர். வெற்றி விழாவில் நொபுநோகா, " வெற்றியை நிர்ணயித்தது அந்தக் காசுதான்" என்றபடியே நாணயத்தை எடுத்துக் காட்ட, அதன் இரு பக்கமும் தலை விழுந்தது.

   உடனே அவர், " வெற்றியை நிர்ணயிப்பது விதியல்ல. நம் நம்பிக்கையும் மன உறுதியும்தான்.  அது தான் உங்களைச் செயல்பட வைத்தது. அதனால்தான் நாம் வெற்றோம்"என்றார்.

 

Free Web Hosting