பெரியார்

   பெரியார் ஒருமுறை மதுரை மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தார். பெரியார் சென்று கொண்டிருந்த மகிழுந்து திண்டுக்கல் அருகே சென்று கொண்டிருந்தது. திடீரென்று ஓட்டுநரை மகிழுந்தை நிறுத்தும் படி சொன்னார். மகிழுந்து நின்றதும், தொண்டர் ஒருவரிடம், சாலை ஓரத்தில் பெண் ஒருத்தி வடை சுட்டுக்கொண்டிருப்பதைச் சுட்டிக்காட்டி, வடை வாங்கிவருமாறு சொன்னார். வடை வாங்கி வந்ததும் அதை அவர் சுவைத்துச் சாப்பிட்டதுடன் உடனிருந்தவர்களுக்கும் கொடுத்தார்.

   உடன் வந்த தொண்டர் ஒருவர், " ஐயா! தாங்கள் வடை சாப்பிட வேண்டும் என்று சொல்லி இருந்தால், ஒரு நல்ல உணவகத்தில் பார்த்துச் சாப்பிட்டிருக்கலாமே" என்று பெரியாரிடம் சொன்னார். அதற்குப் பெரியார், "சாப்பிடலாம்தான்..... ஆனால் இதுபோல் விலை மலிவாக, சுவையாக வடை கிடைக்காது. அத்துடன் நம்மால் ஓர் ஏழைப் பெண்ணும் பயனடைகிறார் அல்லவா! என்றார்

Free Web Hosting