96 மெய்கள் அல்லது மெய்கூறுகள்

பூதம்            -         நிலம், நீர், தீ, வளி, விசும்பு ( 5 )

செய்தற்கருவி    -        வாய், கால், கை, எருவாய், கருவாய் ( 5 )

அறிதற்கருவி    -         செவி, மெய், கண், வாய், மூக்கு ( 5 )

புலன் ( அறிவுகள்) -         ஓசை, ஊறு, ஒளி, சுவை, நாற்றம் ( 5 )

அகக்கலன்       -        எண்ணம், மனம், எழுச்சி, இறுப்பு ( 4 )

அகக்கலன் அகக்கரணம், உட்கருவி, உட்கரணம் எனவும் வழங்கப்படுகிறது. ஒரு சொல்லுக்குப் பல சொல்லாக அருளாளர்கள் பயன்படுத்தியுள்ளனர். அவற்றையும் இங்கு அறிவது நல்லது.

சித்தம், மனம், அகங்காரம், புத்தி எனல் ஒருவகை, நாட்டம், மனம், எழுச்சி, இறுப்பு எனல் மற்றொரு வகை. எழுச்சி - ஆங்காரம், இறுப்பு - புத்தி. அகங்காரம் > ஆங்காரம் என மருவியது. அகம் + காரம் > அகங்காரம் = முனைப்பு ஆகும். இதுவும் தமிழ்ச்சொல்லே.

உணர்தற்கு உறுதுணை - ஊழி, ஊழ், உழைப்பு, உணர்வு, உவப்பு, ஆள், மாயை ( 7 )

உணர்த்தற்கு உறுதுணை - அத்தன், அன்னை, அருளோன், ஆண்டான், ஆசான் ( 5 )

மேலுள்ளவற்றை  எண்ணினால் 36  மெய்களாகும். இந்த 36 மெய்களின் வகைகளை விரிவாக்கி கூறுமிடத்து 60 ஆகும். முதல் 36 உடன் வகை 60ஐயும் சேர்த்து எண்ணினால் ஆக மொத்தம் 96 மெய்கள் (96 தத்துவங்கள்) ஆகும்.  இவையே, இறைவனால், உயிர்கள் உய்வதற்காகப் படைத்தருளப்பெற்ற கருவிகள். இந்தக் 96 மெய்களைக் கொண்டு அமையப்பெற்றதே நன் ஊனுடம்பு.

மெய்களின் வகை அறுபது ( 60 )

நிலக்கூறு       -      மயிர், தோல், எலும்பு, நரம்பு, தசை ( 5 )

நீர்க்கூறு        -     நீர், குருதி, மூளை, கொழுப்பு, வெண்ணீர் ( 5 )

தீக்கூறு        -     ஊண், உறக்கம், உட்கு, உடனுறைவு, மடி ( 5 )

வளிக்கூறு      -  ஓடல், இருத்தல், நடத்தல், கிடத்தல், தத்தல் ( 5 )

வெளிக்கூறு     -     வெகுளி, இவறன்மை, மயக்கம், செருக்கு, பொறாமை ( 5 )

தொழிற்கருவி   -    வாய் ( பேசல்), கால் ( நடத்தல்), கை ( கொடுத்தல்) எருவாய் (கழித்தல்), கருவாய் ( மகப்பெறல்) ( 5 )

அறிவுவளி      -    உயிர்க்காற்று, மலக்காற்று, தொழிற்காற்று, ஒலிக்காற்று, நிரவுக்காற்று. ( 5 )

தொழில்வழி    -  தும்மற்காற்று, விழிக்காற்று, கொட்டாவிக்காற்று, இமைக்காற்று, வீங்கற்காற்று. ( 5 )

நாடி         -      இடப்பால் நரம்பு, வலப்பால் நரம்பு, நடுநரம்பு, இடக்கண் நரம்பு, உள்நாக்கு நரம்பு, கருவாய் நரம்பு, எருவாய் நரம்பு. ( 10 )

ஓசை        -   நுண்ணோசை, நினைவோசை, மிடற்றோசை, செவியோசை ( 4 )

முப்பற்று    -        பொருட்பற்று, மகப்பற்று, உலகப்பற்று ( 3 )

முக்குனம்    -     அமைதி, ஆட்சி, அழுந்தல் ( 3 )

Free Web Hosting