சொற் சிறப்பு
தமிழ் மொழிக்குள்ள சிறப்புகளில் " சொற்சிறப்பு" என்பதும் ஒன்று. இச் சிறப்பு ஒரு தனித்தன்மை வாய்த்தது, இதனைப் பறமொழிகளில் காணை இயலாது. பிற மொழிச் சொற்கள் உருவத்தை மட்டுமே காடுவன. தமிழ்ச் சொற்கள உருவத்தையும், பருவத்தையும் சேர்த்துக் காட்டக் கூடியன.
" பெண்" ஆங்கிலேயர் " woman" எனபர். வடமொழியினர் "ஸ்திரீ" என்பர். இவை இரண்டும் உருவத்தை மட்டுமே காட்டுகின்றன: பருவத்தைக் காட்டவில்லை. காட்ட வேண்டுமானால், "young", " old " என்பதையோ சேர்த்துக் கூறியாக வேண்டும். இவை அம் மொழிகளின் சொற்சிறப்பைக் காடுவதாக இல்லை. தமிழிலுள்ள சொற்கள் உருவத்தோடு அதன் பருவத்தையும் காட்டுவதைக் கண்டு மகிழுங்கள்.
| பேதை | பெண் 5 அகவைக்கும் கீழ் |
| பெதும்மை | பெண் 10 அகவைக்கும் கீழ் |
| மங்கை | பெண் 16 அகவைக்கும் கீழ் |
| மடந்தை | பெண் 25 அகவைக்கும் கீழ் |
| அரிவை | பெண் 30 அகவைக்கும் கீழ் |
| தெரிவை | பெண் 35 அகவைக்கும் கீழ் |
| பேரிளம் பெண் | பெண் 45 அகவைக்கும் கீழ் |
| பாலன் | ஆண் 7 அகவைக்கும் கீழ் |
| மீளி | ஆண் 10 அகவைக்கும் கீழ் |
| மறவோன் | ஆண் 14 அகவைக்கும் கீழ் |
| திறலோன் | ஆண் 15 அகவைக்கும் கீழ் |
| காளை | ஆண் 16 அகவைக்கும் கீழ் |
| விடலை | ஆண் 30 அகவைக்கும் கீழ் |
| முதுமகன் | ஆண் 30 அகவைக்கும் கீழ் |
இவ்வாறு பன்னிருபாட்டியல் ஆணகளுக்கும் ஏழு பருவப் பெயர்களைத் தருகிறது. மேலும், ஆண்களின் பருவத்தைப் பின்வருமாறும் கொண்டு கூறலாம்.
| பிள்ளை | ஆண் - குழந்தைப்பருவம் |
| சிறுவன் | ஆண் - பாலப் பருவம் |
| பையன் | ஆண் - பள்ளிப் பருவம் |
| காளை | ஆண் - காதற் பருவம் |
| தலைவன் | ஆண் - குடும்பப் பருவம் |
| முதியோன் | ஆண் - தளர்ச்சிப் பருவம் |
| கிழவன் | ஆண் - மூப்புப் பருவம். |